பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைப்பேனே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைப்பேனே (பாட்டும்)
கூட்டும் இசையும் கூற்றின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ கூட்டும் இசையும் கூற்றின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ (பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கமும் நானே எதிலும் இயங்கும் இயக்கமும் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே… என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ஆடவா எனவே ஆடவந்ததொரு பாடும் வாயினையே மூடவந்ததொரு (பாட்டும்) --------------------------------- பாடலின் காணொளி வடிவம்: Our sincere thanks to the person who uploaded this song in the net
பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965) பாடியவர்: T.R. மஹாலிங்கம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: K.V. மஹாதேவன்
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ - அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன் ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை --------------------------------------------------------- பாடலின் காணொளி வடிவம்: Our sincere thanks to the person who uploaded this song in the net
பாடல்: பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965) பாடியவர்: K.B. சுந்தராம்பாள் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: K.V. மஹாதேவன்
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான் முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா சக்தி வடிவேல் வடிவேல் வேல்... சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ? முருகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்? முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்? எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம் என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ -------------------------- பாடலின் காணொளி வடிவம்: Our sincere thanks to the person who uploaded this song in the net
பாடல்: ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965) பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: K.V. மஹாதேவன்
ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா? நாதமா கீதமா - அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா? புதுநாதமா சங்கீதமா - அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என் கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என் கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா?
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ.. அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ? எழுந்தோடி வருவாரன்றோ? எழுந்தோடி தோடி.. இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ? தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்... எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
கலையாத மோகனச் சுவை நானன்றோ? மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ... கலையாத மோகனச் சுவை நானன்றோ?
கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா ------------------------------------------- பாடலின் காணொளி வடிவம் Our sincere thanks to the person who uploaded this song in the net
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பட்டு எதிலும் அவன் குரலே
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன் கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன் என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே
(கங்கைக்கரை)
கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான் பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான்…
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ…
நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா…
(கங்கைக்கரை)
---------------------------------------
Video clipping of this song
http://youtu.be/QtJNTcr4yvs
Our sincere thanks to the person who uploaded this song in the net
பாடல்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு படம்: இரத்ததிலகம் (ஆண்டு 1963) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான் காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் - நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு)
---------------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/Vgvetq_roms
Our sincere thanks to the person who uploaded this song in the net
பாடல்: பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? படம்: சூரிய காந்தி (ஆண்டு 1973) பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன் பாடியவர்: T.M. செளந்தரராஜன் இயக்கம்: முக்தா வி. சீனிவாசன்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது அது அவ்வை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. -------------------------------- Video clipping of this song: http://youtu.be/u2uTvseL6Rw Our sincere thanks to the person who up loaded this song in the net