சனி, ஆகஸ்ட் 31, 2013

பூஜைக்கு வந்த மலரே வா

பாடல்: பூஜைக்கு வந்த மலரே வா
படம்: பாத காணிக்கை (ஆண்டு 1962)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
பாடியவரகள்: பி.பி.ஸ்ரீஇனிவாஸ் - பி.சுசீலா


பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா

ஒ ஒ ஒ ..

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா

ஒ ஒ ஒ ..

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஒ ஒ ஒ ஒ ...

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி
ச் சிலையே வா
-----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
http://youtu.be/21uNV4PPxyo
Our sincere thanks to the person who uploaded this song in the net

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

 படம்: உதவி. The Hindu News Paper. நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

பாடல்: சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?
படம்: வாழ்க்கைப் படகு (ஆண்டு 1965)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே ராமமூர்த்தி


சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

-------------------------------
Video clipping of the song
http://youtu.be/WuFbZvSqAxg
Our sincere thanks to the person who uploaded this song in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன், ஆகஸ்ட் 28, 2013

போனால் போகட்டும் போடா

பாடல் : போனால் போகட்டும் போடா
திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்


போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

-----------------------------
பாடலின் காணொளி வடிவம் (Good quality clipping is not available)
http://youtu.be/CDjDXY4248Y
Our sincere thanks to the person who uploaded this song in the net


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

பாடல்: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
படம்: தங்கப் பதக்கம் (ஆண்டு 1974)
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: M.S. விஸ்வநாதன்


சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி


(மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
 துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.  ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?)


நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

-----------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/3BZ4Fx-GRKY
Our sincere thanks to the person who uploaded this song in the net



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா

பாடல்: மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
படம்: சுமைதாங்கி (ஆண்டு 1962)
இசையமைப்பு: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

---------------------------------------------------
இப்பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/wmjEXNFNupM
Our sincere thanks to the person who uploaded this song in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பாடல்: செந்தமிழ் தேன் மொழியாள்
படம்: மாலையிட்ட மங்கை (ஆண்டு 1958)
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

----------------------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/2YtwS2Tm-2E
Our sincere thanks to the person who uploaded this song in the net

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

பாடல்: கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் - டி.கே.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா


கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
-----------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/P-p0zdfAUXg
our sincere thanks to the person who uploaded this song in the net

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே

பாடல்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே
திரைப் படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: வேதா


சுசீலா:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
இசை ஒன்று பாடினான்
இளம் பெண்ணை நாடி
மெதுவாகப் பேசினான்
பொருளென்ன தோழி
என் சின்ன உடல் ஆட
என் கன்னி இடை ஆட
பின் மன்னவனும் கூட
நான் என்ன சொல்லத் தோழி

அடடா மன்னன் கண்ணனடி
ஆயிரம் கலையில் மன்னனடி
பருவம் கவரும் கள்ளனடி
பள்ளியில் பாடும் கவிஞனடி

குழுவினர்:
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே

சுசீலா:
கானம் வந்த வழியினிலே
குழுவினர்:
கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா:
ஓஹோ கண்ணன் வந்தான் தோழியரே

சுசீலா:
அறியாத பெண்ணிடம் அவன்
சொன்ன வார்த்தை
விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
ஹோ என்னை அவன் மெல்ல
தன் கையிரண்டில் அள்ள
நான் மெல்ல மெல்லத் துள்ள
ஓ என்னவென்று சொல்ல

அவனைக் கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி

குழுவினர்: 
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா:
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: 
காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
சுசீலா: கானம் வந்த வழியினிலே
குழுவினர்: கண்ணன் வந்தான் தோழியரே
சுசீலா: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

-------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/sJpxBX_HgGQ
Our sincere thanks to the person who uploaded this song in the net




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சனி, ஆகஸ்ட் 24, 2013

ஆறு மனமே ஆறு

பாடல் – ஆறு மனமே ஆறு
திரைப்படம் – ஆண்டவன் கட்டளை (ஆண்டு 1964)
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்


ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்


உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

--------------------------
Video clipping of the song
http://youtu.be/O5As4LT9ct8
Our sincere thanks to the person who uploaded this song in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!

பாடல்: ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!
படம்: வல்லவனுக்கு வல்லவன் (ஆண்டு 1965)
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
நடிப்பு: ஜெய்சங்கர், மணிமாலா


நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!


ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)

-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/C9muhp0Upuc
Our sincere thanks to the person who uploaded this song in the net

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்

பாடல்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்
படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

--------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
http://youtu.be/H-UT9Oj9Acs
Our sincere thanks to the person who uploaded this song in the net




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை




பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
இயக்கம்: ஆ.பி.நாகராஜன்
நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜாதேவி & தேவிகா


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
-------------------------

பாடலின் காணொளி வடிவம்:
http://youtu.be/rMHD71WSkqg
Our sincere thanks to the person who uploaded this song in the net


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக


பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
படம்: பாசம் (ஆண்டு 1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

(உலகம்)

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்

(உலகம்)

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

(உலகம்)

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

-----------------------------
Video clipping of this song
http://youtu.be/Psb7RqlAQ5w
Our sincere thanks to the person who uploaded this song in the net



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே

பாடல்: கண்ணா... கருமை நிறக் கண்ணா
படம் : நானும் ஒரு பெண் (ஆண்டு 1963)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கவியரசர் கண்ணதாசன்


கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
(கண்ணா...)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Video clipping of this song
 http://youtu.be/zapJyr8-p2g
Our sincere thanks to the person who uploaded this song in the net 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

பாடல்: பனியில்லாத மார்கழியா
படம்: ஆனந்த ஜோதி (ஆண்டு 1963)
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைப்பு: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி


பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?


பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?


தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

------------------------------------------------------------------------------------
Video clipping of this song
http://youtu.be/WYNNiDOAgFY
Our sincere thanks to the person who uploaded this song in the net

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து

பாடல்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
படம்: புதிய பறவை (ஆண்டு 1964)
பாடியவர்: P.சுசீலா
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைப்பு: விஸ்வநாதன் - ராமமூர்த்தி


சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)
-------------------------------------------------------------------------------

Video clipping of this song
http://youtu.be/5g1GBux5ArQ

Our sincere thanks to the person who uploaded this song in the net


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொடி அசைந்ததும் காற்று வந்ததா

பாடல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
படம்: பார்த்தால் பசி தீரும் (ஆண்டு 1962)
இசை: MS விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்


கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)

 ----------------------------------------------------------------------
Video clipping of this song
http://youtu.be/4rvNInoT6Sc

Our sincere thanks to the person who uploaded this song in the net


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

பாடல்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
திரைப்படம்: பலே பாண்டியா ( ஆண்டு 1962)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி


ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ...

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக
ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

----------------------------------------------------------
Video clipping of the song
 http://youtu.be/s0brrvQD8OU
Our sincere thanks to the person who uploaded this song in the net

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன், ஆகஸ்ட் 21, 2013

அண்ணன் என்னடா தம்பி என்னடா


பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா
படம்: பழநி.
ஆண்டு: 1965
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை



அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..


அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.

------------------------------------------------------------------------------------------
Video Link of the song
http://youtu.be/sEZQQLNBq_o
Our sincere thanks to the person who uploaded this song in the net
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே



பாடல்: ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆண்டு: 1958
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்

---------------------------------------------------------
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே 

-----------------------------------------------------------------
Video clipping of the song
http://youtu.be/f1RMPVcUzIs
Our sincere thanks to the person who uploaded this song in the net



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++