பாடல்: ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆண்டு: 1958
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
---------------------------------------------------------
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
-----------------------------------------------------------------
Video clipping of the song
http://youtu.be/f1RMPVcUzIs
Our sincere thanks to the person who uploaded this song in the net
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2 கருத்துகள் :
அருமை..
அருமை..
A VERY GOOD BEGINNING SIR
கருத்துரையிடுக