பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா
படம்: பழநி.
ஆண்டு: 1965
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.
------------------------------------------------------------------------------------------
Video Link of the song
http://youtu.be/sEZQQLNBq_o
Our sincere thanks to the person who uploaded this song in the net
10 கருத்துகள் :
அருமையான பாடல்... தளத்தை தொடர்கிறேன்...
அருமையானதொரு தொடக்கம்...
கவியரசின் பாடல்களில் திளைக்கலாம் இனி!
நன்றிகள் ஐயா!
Ayya kannathasan avargalin ella paadalgalaium pathividum padi panivudan keetu kolgiren.thangal pani sirakka ellam valla iraivan emperuman Balamuruganai pirarthanai seigiren.
அருமையான தொடக்கம். இப்படி ஒரு
அரும்பணியாற்றிட எண்ணியமைக்கு மகிழ்ச்சி..
தொடருங்கள்..
தொடருகிறோம்..
Dear Sir
super......super....super....
R.SARAVANAN
Sir
Really Very Super.
J.Dhanalakshmi
கவியரசரின் முத்தான பாடலுக்கு சுவையான விளக்கம்!..
music by Viswanathan Ramamurthy
Present Sir
sir,
can you place some songs from pattinathar,arunagiri nathar like philosophy songs.
jagannathan.p from thanjavur.
கருத்துரையிடுக