வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!

பாடல்: ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்!
படம்: வல்லவனுக்கு வல்லவன் (ஆண்டு 1965)
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
நடிப்பு: ஜெய்சங்கர், மணிமாலா


நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!


ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)

-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/C9muhp0Upuc
Our sincere thanks to the person who uploaded this song in the net

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2 கருத்துகள் :

விசு அய்யர் சொன்னது…

காதலை சொல்லும்
கவிஞரின் பாடல் அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒரு நாளைக்கு ஒரு பாடல் தான்... இல்லை என்றால்.. சுப்பையா