பாடல்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
திரைப்படம்: பலே பாண்டியா ( ஆண்டு 1962)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ...
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக
ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்.....
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்..........
வாழச் சொன்னால் வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
----------------------------------------------------------
Video clipping of the song
http://youtu.be/s0brrvQD8OU
Our sincere thanks to the person who uploaded this song in the net
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்: பலே பாண்டியா ( ஆண்டு 1962)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ...
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக
ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்.....
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்..........
வாழச் சொன்னால் வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
----------------------------------------------------------
Video clipping of the song
http://youtu.be/s0brrvQD8OU
Our sincere thanks to the person who uploaded this song in the net
3 கருத்துகள் :
தன்னம்பிக்கை வரிகள்...
///கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்..........///
கவியரசோடுத் தொடர்கிறேன்!
நம்மை நாமே மறக்கும் போது
விண்ணில் பறந்துத் திரியலாம் - பல
வண்ணக் கனவுகள் காணலாம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
சுன்னம்தனை தேனில் நனைத்து
சின்னக் கண்ணனைப் பெற்றிடலாம்...
அன்பும் அறமும் கொண்டிங்கே
இன்பம் பெருக்கி எந்நாளும்
அழகாய் நாமும் வாழ்ந்திடலாம்!
***வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
வகையாய் சொன்னான் கவியரசு
வாருங்கள் யாவரும் வாழ்ந்திடுவோம்
வானோர் போற்ற சிறப்புடனே!
eagerly read, Sir
கருத்துரையிடுக